Latest Post

இனி கேஸ் சிலிண்டருக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்!  


சென்னை:

சமையல் முதல் அனைத்து வீட்டு உணவு வேலைகளுக்கும் கேஸ் சிலிண்டர் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. தமிழகம் முழுவதும் கேஸ் சிலிண்டர் இல்லாத வீடுகளே இல்லை. 

எளிய வசதியாக  ஆன்லைன் அல்லது தொலைபேசி எண் மூலம் கேஸ் முன் பதிவு செய்யும் சிறப்பு வசதியும் வந்து விட்டது.  

இதில் பாரத், இந்தியன் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் மூலம் தயார் செய்யப்பட்டு தனியார் பெயர் கொண்ட நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

விநியோகம் செய்யும் நபர் கேஸ் சிலிண்டரை சரியாக பரிசோதனை கூட செய்து காட்டாமல் அவருக்கு  வேண்டிய டிப்ஸ் சை மட்டும் கேட்டு வாங்கி கொள்கின்றனர். 

இந்த புகார் தொடர்ந்து வரும் நிலையில் இன்று கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் வியோகம் செய்யும் போது அந்த ரசீதில் ரூ.620 அச்சிடப்பட்டுள்ளது. 

ஆனால் விநியோகம் செய்யும் நபர் ரூ.660 வாங்கி சென்றுள்ளார். உடனே அந்த வீட்டுக்காரர் விஷால் பாரத் கேஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். 

வீட்டுக்காரர்: அரசு ரசீது க்கு மேல் பணம் வாங்க சொல்லுகிறதா?

அலுவலக ஊழியர்: இல்லை சார்.

வீட்டுக்காரர்: நீங்கள் ரசீது க்கு மேல் பணம் வாங்க சொல்லுகிறீர்களா?

அலுவலக ஊழியர்: இல்லை சார்.

வீட்டுக்காரர்: பிறகு எதற்கு ரசீது க்கு மேல் பணம் கொடுக்க வேண்டும்? விளக்கம் தாருங்கள் சார்? 

அலுவலக ஊழியர்: நீங்கள் விருப்பப்பட்டால் கொடுக்கலாம், கட்டாயம் இல்லை சார்.

வீட்டுக்காரர்: ஆனால் கட்டாயம் கொடுக்க வேண்டும், இது எங்கள் வண்டிக்கு கூலி என்று சொல்லுகிறார்களே!

அலுவலக ஊழியர்: மன்னித்து விடுங்கள் சார், இதே மாதிரி இனி பணம் கேட்டால் 044 25910236 இந்த எண்ணுக்கு புகார் கொடுங்கள், இனிமேல் கூடுதல் பணம் கொடுக்க வேண்டாம்.

       
இதே மாதிரி படிக்க தெரியாத மக்கள் கூடுதலாக ரூ.20 முதல் ரூ.100 வரை  பணம் கொடுத்து தான் வருகின்றனர். இதற்கு கேஸ் நிறுவனம் விழிப்புணர்வு கொடுக்குமா? பார்ப்போம்.
      

2 வது முறையும் கர்பமாக்கிய சென்னை வாலிபர்! லிதுவேனியா நாட்டை சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

மிகுந்த ஆசை, கனவுகளுடன் நான் துபாயில் தங்கியிருந்து மேல்படிப்பு படித்து வந்தேன். அப்போது சென்னை அமைந்தகரையை சேர்ந்த தொழில் அதிபர் ருமையாஸ் அகமது, துபாயில் என்னை சந்தித்தார். 

அவர் என்னை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகினார். என்னை திருமணம் செய்துகொள்வதாகவும் தெரிவித்தார்.இதனால் அவருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கவைத்தார்.

அவரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியதின்பேரில் எனது வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்தேன். ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மார்ச் மாதம் இந்த கருகலைப்பு நடந்தது. அதன்பிறகும் அவர் கொச்சி உள்பட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச்சென்று, என்னோடு உல்லாசத்தை பகிர்ந்தார். அதன்விளைவாக தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன்.

அவர் என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவரது குடும்பத்தினர் ‘தமிழகத்தை விட்டு நீ ஓடி விடு’ என்று எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். தெரியாத, புரியாத சென்னையில் என்னை தனியாக தவிக்க வைத்துவிட்டு எனது காதலர் தலைமறைவாகி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவிட்டார். ஆயிரம்விளக்கு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசெல்வம் 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
திமுக போட்ட வழக்கினால் தான் ஜெயலலிதா மரணமடைந்தார்!


நாங்குநேரி:

விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது:

“மக்களுக்கான திட்டங்களை அதிமுக அரசு தான் நிறைவேற்றியது. மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகிறார்.

மக்களின் குறைகளை கேட்க திண்ணை பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். திமுக ஆட்சியில் இருந்தபோது இதுபோல திண்ணையில் அமர்ந்து மனு வாங்கியிருந்தால் அவர் நல்ல தலைவர் என்று ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக ஸ்டாலின் பேசி வருவது வேடிக்கையானது. என்ன பேச வேண்டும் என்றே தெரியாமல் அவர் பேசுகிறார். 

திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டு தான் ஜெயலலிதா மரணமடைந்தார். 

ஜெயலலிதாவை வசைபாடிய ப.சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கியுள்ளது.

தொடர்ந்து பொய் பரப்புரை செய்து வரும் ஸ்டாலின் உள்ளிட்டோரையும் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது” 

என்றார். 


Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.