13 வயது சிறுமியிடம் வளர்ப்பு தந்தை சில்மிஷம்

May 08, 2018
13 வயது சிறுமியிடம் வளர்ப்பு தந்தை சில்மிஷம்


ஐதராபாத்:

தொடர்ந்து நாட்டில் சிறுமிகள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தற்போது ஐதராபத்தில் ஒரு அதிர்ச்சியான சமபவம் நிகழ்ந்து உள்ளது. தந்தை என அழைக்கபட்டவராலேயே 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த   விதவைப்பெண் ஒருவர்  இவருக்கு  13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். கடந்த  8 வருடங்களுக்கு முன்  விதவைப்பெண் ஒரு  நபரை திருமணம் செய்து கொண்டார்.  8ம் வகுப்பு படித்து வந்த  சிறுமியும் அவரை அப்பா என அழைத்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம்  தாயார் வேலைக்கு சென்று விட்டார். அப்போது சிறுமியிடம்  அந்த நபர் பாலியல்  வன்முறையில் ஈடுபட்டு உள்ளார். இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் உங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்ய மாட்டேன் என சிறுமியை  மிரட்டி உள்ளார். 

4 நாட்களுக்கு பிறகு  தாயார் வேலைக்கு செல்ல தயாராகி உள்ளார்.  அப்போது சிறுமி என்னை தனியே விட்டு செல்ல வேண்டாம் அப்பா தன்னிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாக கண்ணீர் விட்டபடி  கூறி உள்ளார். 

இதை தொடர்ந்து தயார் கணவனை கண்டித்து உள்ளார். ஆனால் கணவன் சிறுமி பொய் சொல்வதாக  கூறி உள்ளார். கணவரை எச்சரித்து அந்த பெண் விட்டு விட்டார்.

ஒரு மாதத்திற்கு முன் தாயார் மீண்டும் வேலைக்கு சென்றதும் அந்த நபர் தன்னுடைய வேலையை மீண்டும் தொடங்கி விட்டார். ஐதராபாத்தில் அந்த  குடும்பம் ஒரு நெரிசலான நடுத்தர வர்க்க இருந்தபோதிலும், சத்தமாகக் கூச்சலிட்டபோதும்  அங்கு உதவிக்கு யாரும் வரவில்லை.

வேலைக்கு சென்று திரும்பிய தாயாரிடம்  மகள் அழுதபடி அனைத்து விவரங்களையும் கூறி உள்ளார். இதை தொடர்ந்து தாயாரும் மகளும் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர். 

புகாரை தொடர்ந்து  அந்த நபர் தலைமறைவாகி உள்ளார். தாயாரின் தொலைபேசியில் பேசிய அவர் மன்னிப்பு கோருவதாகவும் புகாரை வாபஸ் பெறவும் கேட்டு உள்ளார். மேலும் சிறுமி பெயரில்  வங்கியில் பணம் போடுவதாகவும், கல்வி செலவை ஏற்பதாகவும் கூறி உள்ளார்.

இது குறித்து சிறுமி கூறும் போது:

 ஏன் உன் அம்மாவிடம் கூறினாய் என அவர் என்னை அடித்து உதைத்தார். நான்  கழிவறைக்கு சென்று பூட்டி கொண்டேன்.  அவர் கதவை உடைத்து உள்ளே வந்து  என்னை பெல்டால் தாக்கினார். 

எனது சத்தம் கேட்டு  இருந்தும் எனக்கு யாரும் உதவி செய்ய வரவில்லை.  ஒரு வேளை அச்சம் காரணமாக இருக்கலாம். 

அவர் என் உயிரியல் தந்தை அல்ல என்பது எனக்குத் தெரியும். என கூறினார்.

தற்போது குற்றாவாளியை போலீசார் கைது செய்து உள்ளனர்.
Labels:

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.