1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும்- உச்சநீதிமன்றம்

May 14, 2018

1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும்- உச்சநீதிமன்றம் தமிழகத்தில் ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் அவற்றுக்கு அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதாக வழக்கறிஞர் கே.பாலு வழக்கு தொடர்ந்தார். 
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் டாஸ்மாக் கடை செயல்பட்டால், அவற்றை மூட உத்தரவிட்டது. 
இதையடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் ஆயிரத்து 300 டாஸ்மாக் கடைகளை மூடிய தமிழக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. 
மேலும், நெடுஞ்சாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள தூரத்தை தனித்தனியாக கணக்கிட்டு, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.