விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் மாற்றம்

May 23, 2018
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் மரணம்: இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் மாற்றம்ஆலந்தூர்:

சென்னையை அடுத்த நீலாங்கரை, துரைப்பாக்கம், கானத்தூர், தரமணி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நீலாங்கரை குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகளை பிடிக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நீலாங்கரை பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித்திரிந்த மெரினா கண்ணகி சிலை அருகே வசித்த அந்தோணிராஜை (வயது 21) சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீடு புகுந்து திருடும் செயல்களில் அந்தோணிராஜூடன் ஒரு கும்பல் ஈடுபட்டதாக தெரியவந்தது. கடந்த 17-ந் தேதி அந்தோணிராஜிடம் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தியதாகவும், அப்போது அவரை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அந்தோணிராஜை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நீலாங்கரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தலைமை காவலர்கள் செந்தில்குமரன், அகிலன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் மாற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்தோணிராஜின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபின் ஆய்வு செய்தார். அப்போது பிரேத பரிசோதனை சரியாக நடைபெறவில்லை என அந்த அறிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்க மறுத்தார். 


மேலும் அந்தோணிராஜின் உடலை வேறு டாக்டர்களை கொண்டு மறுபிரேத பரிசோதனை செய்யவும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அடக்கம் செய்யப்பட்ட அந்தோணிராஜின் உடலை இன்று (புதன்கிழமை) தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.