தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்

May 30, 2018
தி.மு.க. மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்


ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அரசு அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அங்கு பணியாற்றியவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகளின் பங்கு இருப்பது கவலையளிக்கிறது. மக்கள் போராட்டம் வென்று உள்ளது. போராடிய மக்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆலையை மூடும் நடவடிக்கை கண்துடைப்பு என ஸ்டாலின் கூறுகிறார்.

1996-ல் ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்தது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான். ஆலை அபாயகரமாக செயல்பட்டது உறுதியானதால் தான் மூடப்படுகிறது. மூடக்கூடிய ஆலையை திறந்து பாவத்தை தி.மு.க. செய்து உள்ளது. 

இதன் பின்விளைவுகள் ஓரிரு நாட்களில் வந்தது கிடையாது. இந்த ஆலையால் மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக ஆலைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதில் எத்தனை முறை தி.மு.க. ஆட்சி நடந்து இருக்கிறது. 

ஸ்டெர்லைட் ஆலையை தி.மு.க. ஏன் ஆரம்பித்தது? தற்போது இதை மூடுவதற்கு கருத்து சொல்லும் ஸ்டாலின் திறந்ததற்காக தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அபாயகரமான ஆலையை மூட கருத்து சொல்பவர்கள். திறந்ததற்கான காரணத்தை சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். 

தமிழகத்திற்கு நல்ல தொழிற்சாலை வரவேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு பாதிக்க கூடாது.ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது சரியான நடவடிக்கை தான். 

இவ்வாறு அவர் கூறினார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.