தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு வரவேற்பு

May 04, 2018
தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு வரவேற்பு 

தமிழகம் வந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் வரவேற்றனர். 
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். விமானப் படை சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்த குடியரசுத் தலைவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்டோர் வரவேற்றனர்.  
சென்னையில் இருந்து வேலூர் செல்லும் குடியரசுத் தலைவர், சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து நாராயணி மருத்துவக் கல்லூரியில் இதயம் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பிரிவுக் கட்டிடத்தை திறந்து வைக்கும் அவர் பின்னர் வேலூர் பொற்கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். 
அங்கு நடைபெறும் யாகத்திலும் கலந்துகொள்கிறார். மாலை 6 மணிக்கு சென்னை திரும்பும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் இரவு 7.30 மணி முதல் 8.00 மணிவரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
நாளை சென்னை பல்கலைக் கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர் அதனைத் தொடர்ந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் கலந்துகொள்கிறார். 

கல்லூரி வளாகத்தில் கலையரங்கு ஒன்றையும் திறந்து வைக்கிறார்.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.