அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க தமிழகம் முழுவதும் மாதிரி சட்டமன்றம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

May 31, 2018
அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க தமிழகம் முழுவதும் மாதிரி சட்டமன்றம் நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்சென்னை:

தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மாதிரி சட்டமன்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலைக்கு சுற்றுப்புறச்சூழல் அனுமதி கொடுத்தது அ.தி.மு.க. அரசுதான். ஆலையை தொடங்குவதற்கான ஆணையை கொடுத்ததும் அ.தி.மு.க. அரசுதான். ஆலை செயல்பட தடையில்லா சான்று வழங்கியதும் அ.தி.மு.க. அரசுதான்.

ஸ்டெர்லைட் ஆலைக்கான அடிக்கல் நாட்டியதும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையால் எந்தவித பாதிப்புமில்லை, விஷவாயு வெளியாகவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னால் சான்றிதழ் கொடுத்ததும் அ.தி.மு.க. அரசு தான்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் 100 நாட்கள் போராடியவர்களின் பிரதிநிதிகளை, அமைப்புகளை சேர்ந்தவர்களை முதல்-அமைச்சர் அழைத்து பேசாத காரணத்தால், 100-வது நாளில் ஒரு மிகப்பெரிய மக்கள் பேரணியை நடத்தி, அதில் ஒரு பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தை உருவாக்கியதே காவல்துறையினர் தான். அதனால் 13 பேர் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி இருக்கின்றனர்.


எனவே, காவல்துறை சட்டம்-ஒழுங்கு தலைவராக இருக்கும் டி.ஜி.பி., அதேபோல, மதுரை மண்டல ஐ.ஜி., நெல்லை சரக டி.ஐ.ஜி., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முதல்- அமைச்சர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றால், தி.மு.க. சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.சட்டமன்றத்தில் பேசுவதற்கு யாரும் நீதிமன்றம் செல்ல முடியாது என்ற தைரியத்தில் பேசுகிறார்கள். துணிவிருந்தால், தெம்பிருந்தால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தி.மு.க.தான் காரணம் என்று வெளியில் வந்து அறிக்கை விடட்டும். அடுத்த நிமிடமே கோர்ட்டில் நாங்கள் சந்திப்போம். கலவரத்தின் முழு காரணமாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. மீது பொய்யான பழி சுமத்தி, தப்பித்துக் கொள்ளலாம் என்று கனவு கண்டால், அது நிச்சயம் நிறைவேறாது. பகல் கனவாகவே முடியும்.

ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இன்று மே 30-ந் தேதி ஆகிவிட்டது. இடையில் ஒருநாள் மட்டுமே இருக்கிறது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த அரசு பிரதமரிடமும் இதுபற்றி ஆலோசிக்காமல், மத்திய அரசை கேள்வி கேட்க முடியாமல், முதுகெலும்பு உடைந்த நிலையில் இந்த ஆட்சி இருக்கிறது.

இந்த நாசகார ஆட்சியை, படுகொலை செய்யக்கூடிய ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, தமிழக மக்களை பாதுகாப்போம் என்று உறுதியெடுக்கும் வகையில் தான் இந்த மன்றம் இங்கு கூடியிருக்கிறது.

இதுபோன்ற மாதிரி சட்டமன்றம், சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடத்தி, தமிழக மக்களிடம் இந்த ஆட்சியின் அலங்கோலங்களை அக்குவேறு, ஆணிவேறாக எடுத்துரைக்க, இந்த மன்றம் ஒரு முன்மாதிரியாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

துரைமுருகன் பேசும்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேரவையில் அறிக்கை அளித்த முதல்வர் பழனிசாமி, துப்பாக்கி சூடு என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை. 


13 பேர் பலியானதையும் மறைத்துள்ளார். இது பேரவை விதிகளை மீறிய செயல். நாங்கள் பேரவையில் இருந்திருந்தால் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருப்போம் என்றார். 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.