காலா இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஏமாற்றம்

May 10, 2018
காலா இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஏமாற்றம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’. தனுஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இவருடைய இசையில் உருவான பாடல்களை நேற்று இணையதளத்தில் தனுஷ் வெளியிட்டார். மேலும் பல்லாயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் ரஜினி பேசும்போது, ‘இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. 
நல்லவனாக இருக்க வேண்டும். 

ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்கக் கூடாது. காலா அரசியல் படம் கிடையாது. ஆனால் அரசியல் இருக்கும். கபாலி இரஞ்சித் படம். ஆனால், காலா என்னுடைய படமாகவும், இரஞ்சித் படமாகவும் இருக்கும் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்.

தொடர்ந்து பேசிய ரஜினி, அரசியல் பற்றி பேசுவேன் என்று அனைவரும் எதிர்ப்பார்க்கிறீர்கள். நான் என்ன செய்வது இன்னும் தேதி வரவில்லையே. கடமை இருக்கும்.

 நேரம் வரும் போது அரசியல் பற்றி பேசுகிறேன். கடவுள் ஆசிர்வாதத்துடன், மக்கள் ஆதரவுடன் தமிழ் நாட்டுக்கு நல்ல நேரம் பிறக்கும். என்று பேசினார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், எதிர்ப்பார்த்துபோல், ரஜினி எதுவும் பேச வில்லை. முக்கிய அறிவிப்பை வெளியிட வில்லை. 

இது ரசிகர்களுக்கு  ஏமாற்றமாக அமைந்திருக்கிறது. 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.