தமிழ் நாட்டில் மழைக்கு வாய்ப்பு- வானிலை

May 04, 2018
தமிழ் நாட்டில் மழைக்கு வாய்ப்பு- வானிலை
உள் தமிழகத்தில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாகவும், தென் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 
வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் காங்கேயத்தில் 14 சென்டிமீட்டரும், ஆத்தூரில் 13 சென்டிமீட்டரும், திருப்பூர், சத்யமங்கலத்தில் 9 சென்டிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது. 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.