தமிழக அரசின் அரசாணை வரவேற்கத்தக்கது- ரா.சரத்குமார்

May 28, 2018
தமிழக அரசின் அரசாணை  வரவேற்கத்தக்கது- ரா.சரத்குமார்


சென்னை:

ச.ம.கட்சி தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்:

கடந்த 22-ந்தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான மாபெரும் முற்றுகை போராட்டத்தில், இன்னுயிர்களை தியாகித்த ஆன்மாக்களுக்கு, ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை சமர்ப்பித்து அஞ்சலி செலுத்துவோம்.

தமிழக மக்களின் உணர்வுக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்ற தமிழக அரசின் அரசாணை  வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், சட்டக்குறுக்கீடுகள் இல்லாமல் தற்போது கிடைக்கப்பெற்றிருக்கும் தீர்வே நிரந்தரத்தீர்வாக அமைவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

தன்னெழுச்சியான 100 நாட்கள் போராட்டத்தில் உயிர் நீத்தும் தீர்வு காண்போம் எனும் மாண்பில் பல இன்னுயிர்களை தியாகித்து, வெற்றி கண்ட போராட்டக்காரர்களுக்கும், தூத்துக்குடி பகுதி வாழ் மக்களுக்கும், போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.