இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன

June 04, 2018
இன்று பிற்பகல் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின்றனசென்னை:

மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. நீட் என அழைக்கப்படும் இந்த தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த மாதம் 6-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தானில் தேர்வு மையம்  ஒதுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.சி.யின் அலட்சியம் காரணமாக மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மாணவர்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதும் கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையமும் விசாரணை நடத்தியது. இந்நிலையில், நீர் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 

www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, வினாத்தால் குளறுபடி ஆகியவை காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க மறுத்தனர். இதனால், அறிவிக்கப்பட்டபடி 2 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும். 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.