எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுத்தது: இனி கைது செய்ய தடை இல்லை

June 01, 2018

எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுத்தது: இனி கைது செய்ய தடை இல்லை
பெண் பத்திரிகையாளர்களை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்ததாக வழக்கில், எஸ்.வி சேகருக்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆளுநர் பன்வாரிலால் பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தை தொடர்ந்து, பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், தனது முகநூல் பக்கத்தில், பெண் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் கருத்து ஒன்றை பகிர்ந்திருந்தார்.
                                
இதுதொடர்பாக, அளிக்கப்பட்ட புகாரையடுத்து, எஸ்.வி.சேகர் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

ஆனால் மேல்முறையீட்டில் எஸ்.வி.சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், தடையை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் மூலம் எஸ்.வி.சேகரை கைது செய்ய தற்போது போலீசாருக்கு தடை இல்லை.

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.