கோவை -பெங்களூருக்கு இடையேயான இரண்டு அடுக்கு ரெயில் இன்று முதல் இயக்கம்

June 08, 2018


கோவை -பெங்களூருக்கு இடையேயான இரண்டு அடுக்கு ரெயில்  இன்று முதல் இயக்கம்


கோவை:

கோவை -பெங்களூருக்கு  இடையே ரெயில் இயக்க படவேண்டும் என்பது கோவை நகர மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இதையொட்டி  தென்இந்திய ரெயில்வே சார்பில் கோவையில் இருந்து பெங்களூருக்கு இரட்டை அடுக்கு ரெயில் புதிதாக அறிமுக படுத்தபட்டது.

உதய் எக்ஸ்பிரஸ் என்ற இந்த புதிய இரட்டை அடுக்கு ரெயில் தொடக்கவிழா இன்று கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

மேலும் இந்த ரெயில் தொடக்க நாளில் மட்டும் காலை 10 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு மாலை 5.20க்கு சென்றடைகிறது.10 தேதி முதல் காலை 5.20க்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 12.40மணிக்கு பெங்களூருக்கு சென்றடைகிறது.

மேலும் இந்த ரெயில் வார நாட்களில் திங்கள் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இந்த இரயில் இயக்கபடுகிறது. மேலும் இந்த ரெயிலில்  ஜி.பி.எஸ் தகவல் தொழில்நுட்ப முறையிலான எல்.இ.டி.தகவல் பலகைகளில் இந்த பெட்டிகளில் பொருத்தபட்டுள்ளது.

இந்த  ரெயிலில் உயர்தரமான.கழிவறை, எல்.இ.டி.விளக்குகள் என்று பயணிகளை கவர்ந்து இழுக்கும் என தெற்கு இரயில்வே பொது மேலாளர்  தெரிவித்தார்.

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  பாராளுமன்ற உறுப்பினர்கள்  A.P.நாகராஜ் மற்றும் A.K செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.கோவை செய்தியாளர்: RAJ KUMAR

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.