மாநகராட்சி அலுவலகங்களில் சிசிடிவி!

July 11, 2019

மாநகராட்சி அலுவலகங்களில் சிசிடிவி!மாநகராட்சியில் நடைபெறும் லஞ்சம், ஊழல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில், மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் 4 வாரத்தில் லஞ்சப் புகார் மையங்கள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், பணியிட மாற்றத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணி, அரசு துறை அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்ட போதிலும் லஞ்சம் குறையவில்லை எனவும் தெரிவித்தார்.
லஞ்சம் புழங்கும் இடங்களை கண்டறியவும், லஞ்சம் வாங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயாராக இல்லை என தெரிவித்த நீதிபதி, மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள மாநகராட்சி சொத்துக்களை மீட்க வேண்டும் எனவும் கூறினார்.
இதற்காக மதுரை மாநகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் 4 வாரத்தில் லஞ்சப் புகார் மையங்கள் திறந்து, சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
மாநகராட்சி ஊழியர்கள் தங்கள் பெயரில், குடும்பத்தினர் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்து விபரங்களை தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையர் 12 வாரத்தில் உத்தரவிட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, மாநகராட்சி இடங்களை மீட்பது குறித்து 4 வாரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளை மாநகராட்சி ஆணையர் பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.மாநகராட்சி#tamil live news# மாநகராட்சி ஆணையர்#மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்# மதுரை மாநகராட்சி

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.