கொடுங்கையூரில் கத்தியுடன் இளைஞன் சிக்கினான்

July 18, 2019
கொடுங்கையூரில் கத்தியுடன் இளைஞன் சிக்கினான் கொடுங்கையூர் : 

எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, ஐயப்பா திரையரங்கம் அருகில் ஹெல்மெட் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அந்த வழியே இளைஞன்  ஒருவன் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் போக்குவரத்து காவலர்கள்  கணபதி மற்றும்  பாலமணி அவனை நிறுத்தி  விசாரணை நடத்தினர். 

அவனது பேச்சில் தெளிவு இல்லாததால் அவனிடம் இருந்த பையை சோதனை செய்தனர். சோதனை செய்ததில் அதில் கூர்மையான கத்தி இருந்தது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரித்த போது அவன் புழல்  பகுதியில் வசிப்பதும் அவன் பெயர் நாகராஜ் என்பதும் தெரிய வந்துள்ளது. 

எங்கு போகிறாய்? என்று கேட்டதற்கு ஒருவனை வெட்ட போகிறேன் என்று அவன் கூறியது அதிர்ச்சியளித்துள்ளது. உடனே அவனிடம் உள்ள செல்போன், இரு சக்கர வாகனம், கத்தி ஆகியவைகளை பறிமுதல் செய்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


kodungaiyur news# accuste in kodungaiyur with knife# ayyappa thetre traffic police# kodungaiyur police station# tamil live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.