வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

July 11, 2019
வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர் யாருக்கும் மருத்துவ இடம் வழங்கப்படாது என்றும், போலி சான்றிதழ் சமர்பிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்  என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்க கூடாது என்றும் வலியுறுத்தி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்:
மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை "கண்கொத்தி பாம்பை" போல கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதுவரை பெறப்பட்ட 39 ஆயிரத்து 13 விண்ணப்பங்களில் தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகு 3 ஆயிரத்து 516 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இதற்காக தனியாக குழு அமைத்து, விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாணவரது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோரின் சாதி சான்றிதழ், நியாயவிலை அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். 
இவற்றோடு சேர்த்து, மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் பிரமாண பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெறப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
அந்த பிரமாண பத்திரத்தில், மாணவரின் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்பிக்கப்பட்டடுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை, அதில் ஏதாவது தவறு இருந்தால் மாணவரை தகுதி நீக்கம் செய்யலாம், கிரிமினல் வழக்கு தொடுக்கலாம் அதற்கு சம்மதிக்கிறேன் என பெற்றோரும், மாணவரும் உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ளதாகவும், 
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்# health minister# tamil live news# medical seat# fake application

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.