மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

July 10, 2019
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது 


சென்னை:


தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. 


ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.


இந்நிலையில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் தமிழக கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அவர்களின் பெயர்கள் அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


போலியான ஆவணங்கள் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் கூறி உள்ளது.

இதுபற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்:

“நீட் பதிவு எண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால், மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் விண்ணப்பித்தால் தகுதி இழந்துவிடுவார்கள். 

பிற மாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன, மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும்” 

இவ்வாறு அவர் கூறினார்.

tamil live news# minister vijaya basker# medical counseling started# omandur hospital#

 

Post a comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.