10ஆம் தேதி செயற்குழு கூட்டம்: புதிய முடிவு எடுக்க வாய்ப்பு!

10ஆம் தேதி செயற்குழு கூட்டம்: புதிய முடிவு எடுக்க வாய்ப்பு! 


புதுடில்லி: 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


லோக்சபா தேர்தலில் அடைந்த படுதோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் பதவி விலகினார். மேலும், அடுத்த தலைவர் பதவிக்கு, தனது குடும்பத்தினர் பெயரை பரிசீலனை செய்ய வேண்டாம் எனக்கூறியுள்ளார். 


ஆனால், அவரை சமாதானபடுத்தி, மீண்டும் தலைவர் பதவியில் தொடர வைக்க காங்கிரஸ் நிர்வாகிகள் முயற்சி செய்தனர். ஆனால்,ராகுல் தனது முடிவில் உறுதியாக உள்ளார். 


இதனையடுத்து, பிரியங்காவை, தலைவராக்க கோரிக்கை எழுந்தது. ஆனால், தலைவர் பதவி விவகாரத்தில் எனது பெயரை இழுக்க வேண்டாம் என பிரியங்கா கூறிவிட்டார். இதனால், அக்கட்சியில் அடுத்த தலைவர் யார், எப்போது தேர்வு செய்யப்படுவார் என கேள்வி எழுந்தது. பார்லிமென்ட் தொடர் முடிவடைந்ததும், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடக்கும் என தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; காங்கிரசின் செயற்குழு கூட்டத்தை வரும் ஆக.,10 காலை 11 மணிக்கு கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். 


ராகுல், பதவி விலகிய பிறகு, இந்த கூட்டம் நடைபெறுவதால், காங்கிரஸ் கட்சிக்கு புது தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.congress office delhi# congress office meeting# rahul gandhi meeting# committe meeting# congress meeting# august 10 congress meeting# soniya gandhi meeting# tamil live news# live news# 2019 congress meeting

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.