ஆகஸ்டு 15ஆம் தேதியன்று திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆகஸ்டு 15ஆம் தேதியன்று திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு

சென்னையில், சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு, பொதுவிருந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்டு 15ஆம் தேதியன்று திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் பங்கேற்கின்றனர்.
இதேபோல் சென்னை மண்டலத்தில் உள்ள முக்கிய கோவில்களில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதற்கான ஏற்பாடுகளை கோவில்களின் செயல் அலுவலர்கள் செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

august 15 koil dharisanam# august 15 edapadi# august 15 temple dharisanam# tamil live news# live newsPost a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.