காவிரியில் நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்!

காவிரியில் நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர்! 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு ஒரு லட்சம் கன அடியைத் தாண்டியது. 
கர்நாடகா மற்றும் அங்குள்ள அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் முழு கொள்ளளவை நெருங்குகின்றன. 84 அடி நீர்த்தேக்கும் அளவு கொண்ட கபினிக்கு நொடிக்கு 1 லட்சத்து 4 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 
அந்த அணையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் 124 அடிக்கு நீர்த்தேக்கும் அளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணைக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து நொடிக்கு ஒரு லட்சத்து 20 அடி நீர் திறந்து விடப்படுகிறது. மொத்தமாக நொடிக்கு 2 லட்சத்து 40 கன அடி நீர் காவிரியில் பாய்கிறது. 
தமிழக - கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுக்கு காவிரியில் வரும் நீரின் அளவானது நொடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதேஅளவு நீர் ஒகேனக்கலிலும் பாய்வதால், அருவிகள் நீரில் மறைந்தன. 
ஒகேனக்கலில் இருந்து நொடிக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் காவிரி நீர் மேட்டூர் அணையை அடைகிறது. இதனால் அந்த அணையின் நீர்மட்டம் 69.31 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 
அணையில் இருந்து குடிநீருக்காக 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நொடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி வீதம், காவிரியில் தொடர்ந்து 6 நாட்களுக்கு நீர் திறக்கப்படும் பட்சத்தில், மேட்டூர் அணை நிரம்பக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவது டெல்டா மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

kavery anai# cauvery water# cauvery water level# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.