26-ஆம் தேதி வரை பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

26-ஆம் தேதி வரை பிரதமர் மோடி சுற்றுப்பயணம்


பிரதமர் மோடி இன்று முதல் வருகிற 26-ஆம் தேதி வரை பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதில் முதற்கட்டமாக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன், பிரதமர் சார்லஸ் பிலிப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்தும், வர்த்தகம், பாதுகாப்பு, மின்னுற்பத்தி, பயங்கரவாத எதிர்ப்பு, இந்தோ-பசுபிக் கடல் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்று இரவு மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் விருந்து அளித்து கவுரவிக்கிறார்.
பாரிஸ் நகரில் உள்ள யுனஸ்கோ அலுவலகத்தில் பிரான்ஸ் வாழ் இந்தியர்களை பிரதமர் மோடி நாளை சந்தித்து உரையாற்றுகிறார்.மேலும் கடந்த 1950 ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி மும்பையில் இருந்து லண்டனுக்கு 40 பயணிகள் மூன்று ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலையால் பிரான்ஸ் நாட்டின் பிளான்ங் மலையில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர்.
இதே போன்று 1966 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ஆம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க் நகருக்கு பிரான்ஸ் வழியாக 106 பயணிகள், 11 ஊழியர்களுடன் சென்ற ஏர் இந்தியா விமானம், ஆல்ப்ஸ் மலையில், மோசமான வானிலையால் மோதி நொறுங்கியது. இந்திய அணு கமிஷன் தலைவர் ஹோமி பாபா உள்ளிட்ட 106 பயணிகள், மற்றும் 11 ஊழியர்களும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.இந்த இரு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக பாரிஸ் நகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தை மோடி திறந்து வைக்கிறார்.
23-ஆம் தேதி அன்று பிரான்சில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, 24-ஆம் தேதி அன்று அபிதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் மகாத்மா காந்தியன் 150 வது பிறந்த நாளை ஒட்டி அமீரகத்தின் சார்பில் வெளியிடப்படும் சிறப்பு தபால் தலையையும் மோடி வெளியிடுகிறார்.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு அபுதாபியின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் சையத் வழங்கப்பட உள்ளது. அமீரகத்தை உருவாக்க சேக் சையத் பின் சுல்தான் நினைவாக வழங்கப்படும் அந்த விருது மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது . 
சேக் சையத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

24-ஆம் தேதி ஐக்கிய அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி பக்ரைன் செல்ல உள்ளார். பக்ரைன் நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை.  பக்ரைன் நாட்டில் ரூபே கார்டை பயன்பாட்டையும் மோடி தொடங்கி வைக்க உள்ளார். 


25-ஆம் தேதி பக்ரைன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பியாரிட்ஸ் நகரில் நடைபெறும் ஜி -7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கிறார். 26-ஆம் தேதி அன்று அவர், ஜி 7 நாடுகளின் மாநாட்டில் நடைபெறும் டிஜிட்டல் தொழில் நுட்பம், பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கத்தில் பேசுகிறார்.
இதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்குவார் என்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு டிஜிட்டல் தொழில் நுட்பத்தை இந்திய அரசு பயன்படுத்தி வருவது குறித்து மோடி எடுத்துரைப்பார் என்றும் வெளியுறவுத்துறை இணை செயலாளர் சுரேஷ் கே. ரெட்டி கூறினார். prime minister modi# pm modi# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.