3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- எஸ்.பி.வேலுமணி

3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்- எஸ்.பி.வேலுமணி


சென்னை:

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரும் உணர்ந்துள்ளனர். பல்வேறு கட்டுமானங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்நிலையில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக சென்னை அம்மா மாளிகையில்  இன்று  ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்குப் பிறகு 

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  கூறியதாவது:-வடகிழக்கு பருவமழையின்போது மழைநீரை சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அவசியம் ஆகும். எனவே, இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதிலும் வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும்.

3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவாவிட்டால், நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். கட்டிடங்கள் தவிர சாலையோரங்களிலும் மழைநீரை சேகரிக்கும் அமைப்பை செயல்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.PHOTOS: R.PREMrain safety tank compulsary want# sp velumani latest speech# metro water sp velumani# sp velumani  minister about rain water# save rain water# sp velumani  telling save rain water# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.