48 நாட்கள் நீட்டிக்க முறையீடு!

48 நாட்கள் நீட்டிக்க முறையீடு!  


சென்னை: 


அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கோர்ட் கூறியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர்,கடந்த ஆக., 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்., தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். 


வரும் 16ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் முடிகிறது. அனந்தசரஸ் குளத்திற்கு, அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம் செய்ய, 16ம் தேதி கடைசி நாளாகும்.


இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.பிரபாகரன் என்பவர், அத்திவரதர் வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ளன. 


லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இன்னும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என முறையிட்டார். 

இதனை கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறியுள்ளது.athivarathar 48 days extra# madras high court about athivarathar# high court order 
athivarathar # waiting for court order athivarathar#athivarathar koil# kanjipuram athivarathar# athivarathar# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.