67 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் திறப்பு!

67 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் திறப்பு! 

கரூர் மாவட்டத்தில், சுமார் 67 லட்சம் மதிப்பில் அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 
கரூர்  மாவட்டத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பூலம்பாளையத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக சமுதாய கூடம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. 
இதனை திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கள், தொடர்ந்து நன்னியூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமூதாயக்கூடம், மண்மங்கலத்தில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், கடம்பங்குறிச்சி பகுதியில் சமுதாயக்கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதன்பின்னர்  ஒத்தக்கடை பகுதியில், புதிதாக தானியக்களம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், திருமுக்கூடலூர் பகுதியில் மரக்கன்று நடும் திட்டத்தையும் தொடக்கி வைத்தார். 
திட்ட அலுவலர் கவிதா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில், கட்சி பொறுப்பாளர்களும், வளர்ச்சித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
transport minister vijaya basker# govt building opening vijaya basker# karur building opening# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.