உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டலில் தீ: 8 பேர் பலி

உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டலில் தீ: 8 பேர் பலி  

உக்ரைனில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் தென் பகுதியில் உள்ள ஒடேசா என்ற நகரில் ‘டோக்கியோ ஸ்டார்’ என்ற ஓட்டல் உள்ளது. சுமார் 273 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் நேற்று நள்ளிரவு திடீரென, பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி கொளுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த கோர தீவிபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் அங்கு தங்கியிருந்த 10க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் எத்தனை பேர், தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன, எங்கிருந்து தீப்பற்றியது உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ukrein hotel fire# hotel fire# 8 peoples died in hotel fire at ukrein# tamil live news# live news
Labels:

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.