பக்ரீத் பண்டிகை: ஆடுகள் விலை கிடுகிடு!

பக்ரீத் பண்டிகை: ஆடுகள் விலை கிடுகிடு!  


பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில், நேற்று நடந்த வார சந்தையில், 12.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வெள்ளாடுகளுக்கு, தமிழகத்தின் பல பகுதிகளிலும், நல்ல கிராக்கி உண்டு. 

12ம் தேதி, பக்ரீத் பண்டிகை என்பதால், நேற்று நடந்த வார சந்தை, பக்ரீத் சிறப்பு சந்தையாக இருந்தது.விற்பனை அதிகரிக்கும் என்பதால், 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 


அதிகாலை, 5:00 மணிக்கு, சந்தை துவங்கியது.'குர்பானி' கொடுக்க, ஆடுகளை வாங்க, முஸ்லிம்கள் நேரடியாக சந்தையில் குவிய துவங்கியதும், விலை கணிசமாக உயர்ந்தது. காலை, 9:00 மணிக்குள், 25 ஆயிரம் ஆடுகளும் விற்று தீர்ந்தன. நேற்று நடந்த சந்தையில், 12.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. 


'மினி வேன் டிமாண்ட்'அதிக அளவில் ஆடுகள் வந்ததால், அவற்றை, வெளியூர்களுக்கு எடுத்துச் செல்லும், 'டாடா ஏஸ் மினி வேன்'களுக்கு கிராக்கி ஏற்பட்டது. சுற்றுவட்டார நகரங்களில் இருந்து, ஏராளமான வாகனங்கள் வந்தன. 


இதனால், வேன் வாடகையும் உயர்ந்தது.இட்லி கடையில் விற்பனை விர்...சந்தையின் ஒரு நாள் வியாபாரத்தை நம்பி, பலர் இட்லி, வடை, கூழ் விற்பனை செய்கின்றனர். 

நேற்று, மக்கள் கூட்டம் அலை மோதியதால், அனைத்து கடைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, விற்பனை விறுவிறுப்பாக இருந்ததால், கடை நடத்துவோர் மகிழ்ச்சியடைந்தனர்.

bakrith# 2019 bakrith# aadugal# bakrith adugal# bakrith goat# goat in market# goat rate# tamil live news# live news  

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.