காவல் நிலையங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்க முடிவு!காவல் நிலையங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்க முடிவு! 


கோவை:

கோவை மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் போலீஸ் ஸ்டேஷன்கள், மூன்று வகையாக பிரிக்கப்படவுள்ளன. முக்கிய போலீஸ் ஸ்டேஷன்களில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கோவை எஸ்.பி., கட்டுப்பாட்டின் கீழ் பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய ஐந்து சரகங்கள் உள்ளன. ஐந்து சரகங்களிலும், 35 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.மாநகர போலீஸ் போன்று, மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் நிர்வாக ரீதியாக பிரிக்கப்படாமல் உள்ளன. 

மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவுக்கு ஒரு இன்ஸ்பெக்டர் என, பிரிக்கப்பட்டுள்ளது.ஆனால், மாவட்ட போலீசில், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு, ஒரே இன்ஸ்பெக்டர் தான் உள்ளார். 


ஸ்டேஷன்களில் போலீசாரின் எண்ணிக்கையும், தேவையான அளவுக்கு இல்லை. 
மாவட்ட பகுதியில் சூலுார், பொள்ளாச்சி, துடியலுார், மேட்டுப்பாளையம், வடவள்ளி போன்ற போலீஸ் ஸ்டேஷன் எல்லைகள் பெரியதாகவும், முக்கியமான இடங்களாகவும் உள்ளன.இந்த இடங்களில், போதுமான அளவு அதிகாரிகள் மற்றும் போலீசார் பணியில் இல்லாமல் உள்ளனர். 


இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில், அதிக குற்ற சம்பவங்கள், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி குறைபாடுகள் ஏற்படுகின்றன. 
போலீசாருக்கும் அதிக மனஅழுத்தம், வேலைப்பளு உண்டாகிறது.இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷன்களில் போதுமான அளவுக்கு, போலீசாரை நியமிக்கும் வகையில், பெரிய(ஹெவி), நடுத்தர(மீடியம்), சிறிய(லைட்) போலீஸ் ஸ்டேஷன்கள் என, மூன்று வகையாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், போலீஸ் ஸ்டேஷன்களை பெரிய, நடுத்தர, சிறிய என்று மூன்று பிரிவுகளாக, வகைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு வலியுறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.

எண்ணிக்கை எவ்வளவு இருக்கணும்?பெரிய போலீஸ் ஸ்டேஷன்களில், சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவுக்கு என, இரண்டு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என, குறைந்தபட்சம், 80 பேர் இருக்க வேண்டும்.நடுத்தர போலீஸ் ஸ்டேஷன்களில், ஒரு இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என்று குறைந்தபட்சம், 50 பேர் இருக்க வேண்டும். 

சிறிய போலீஸ் ஸ்டேஷன் என்றால், எஸ்.ஐ., போலீசார் என, 30 பேர் இருக்க வேண்டும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

kovai police# tamil live news# live news# tamil nadu police# tn police station# kovai police station# kovai sp  

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.