சிறந்த தமிழக காவலர்களுக்கு விருது!

சிறந்த தமிழக காவலர்களுக்கு விருது!

மிழக காவல்துறையைச் சேர்ந்த 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதேபோல் ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட 16 அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவல்துறையில் மெச்சத்தகுந்த பணி, வீர தீரச் செயல்கள் புரிந்த அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சிவகங்கை எஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன், சென்னை கியூ பிரிவு டிஎஸ்பி யாக்கூப், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், திண்டிவனம் டி.எஸ்.பி. திருமால், கிருஷ்ணகிரி ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், சென்னை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி லவாகுமார், உதகை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, ஆவடி சிறப்பு போலீஸ் உதவி படைத் தலைவர் கோவிந்தராஜூ, உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்களுக்கு 16 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே காவல் டிஜிபி சைலேந்திரபாபு, காவல் நிர்வாகப் பிரிவு  ஏடிஜிபி கந்தசுவாமி, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட 6 பேருக்கு தன்னலமற்ற சேவைக்கான தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் வழங்கப்பட உள்ளது.
புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் எஸ்.பி. வனிதா, சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் புருஷோத்தமன், சேலம் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணன், ஆகிய 10 பேருக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

independence day awards# independence day 2019# independence day police award list# tamil nadu police award# independence day spl award list# independence day 2019 in secretariat award# tamil live news# live newsPost a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.