பிற நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும்- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பிற நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும்- ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், உயர் அதிகாரிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்தளித்தார்.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது நடன மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்: 
இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டில் வறுமை ஒழிந்து, அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
125 கோடி மக்களும் இணைந்து முன்னேறும் பட்சத்தில், சர்வதேச அளவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், பிற நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிடும்.
பிரதமரின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டார்.

governor banvarilol# 73rd independence day celebration# governor banvarilol# governor banvarilol theneer virunthu# thenir virunthu in governor banvarilol home# guindy governor banvarilol# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.