சுஷ்மா மறைவு: தலைவர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி

சுஷ்மா மறைவு: தலைவர்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி  


புதுடில்லி : 


மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பிரதமர் மோடி, கண்ணீர் விட்டு அழுதார்.

67 வயதாகும் சுஷ்மா சுவராஜ், நேற்று (ஆக.,06) மாலை மாரடைப்பால் காலமானார். மோடியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியிலும், பா.ஜ.,விலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக திகழ்ந்தவர் சுஷ்மா. இவரது மறைவு செய்தி அறிந்ததும், டுவிட்டரில் இரங்கல் செய்தி வெளியிட்டார் பிரதமர் மோடி.இதன் தொடர்ச்சியாக இன்று (ஆக.,07) காலை டில்லியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள சுஷ்மாவின் உடலுக்கு பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது சுஷ்மாவின் குடும்பத்தினரை சந்தித்து மோடி ஆறுதல் கூறினார்.


சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசலிடம் பேசிய பிரதமர் மோடி, கண்ணீர் விட்டு அழுதார். சுஷ்மாவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது கணவர் அழுதபடி கூறியதை கேட்டு, பிரதமரும் கண்ணீர் விட்டார். பின்னர் சிறிது நேரத்திலேயே மோடி அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.


இதேபோல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதீபா ஆகியோரும் சுஷ்மா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது, சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசல் மற்றும் மகள் பன்சுரியை பார்த்த அத்வானி, கண்ணீர் விட்டு அழுதார்.sushma death# sushma bjp# bjp susma# susma died news# tamil live news# live news# 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.