சென்னையில் பலத்த பாதுகாப்பு: தீவிர வாகன சோதனை

சென்னையில் பலத்த பாதுகாப்பு:  தீவிர வாகன சோதனை


சென்னை:


பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் இன்று 3-வது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகள் போலி நம்பர் பிளேட் பொருத்திய வாகனங்களில் ஊடுருவலாம் என்பதால் அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்டையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடலோர பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், சாந்தோம் சர்ச் உள்பட முக்கியமான அனைத்து வழிபாட்டு தலங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லாட்ஜ்களில் சந்தேகத்திற்கிடமாக யாராவது தங்கி உள்ளனரா? என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையத்திலும் பயணிகளின் உடமைகளை ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்த பிறகே கொண்டு செல்ல அனுமதிக்கின்றனர்.

chennai police searching# chennai police#chennai police ride# accuste in chennai# police full search in all public areas# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.