இந்தியாவில் கலைஞர் போன்ற தலைவர் எவரும் இல்லை- மு.க ஸ்டாலின் பெருமிதம்

இந்தியாவில் கலைஞர் போன்ற தலைவர் எவரும் இல்லை- மு.க ஸ்டாலின் பெருமிதம்  
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். 


அதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 
அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் பல ஊர்களில் கலைஞர் சிலை திறக்கப்படும். இந்தியாவில் கலைஞர் போன்ற தலைவர் எவரும் இல்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர்.இந்திய அரசியல் சக்கரத்தை சுழல வைத்தவர் கருணாநிதி. கருணாநிதி முன்பை விட நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார். கருணாநிதி என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் என்று பொருள்.மாநில சுயாட்சிக்காக ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தவர் கருணாநிதி. சமூக நீதிக்கு உலை வைக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கருணாநிதி தளராமல் கொள்கைக்காக செயல்பட்டார்.திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதி என்ன நினைப்பாரோ அதை திமுக எம்.பி.க்கள் செய்து வருகின்றனர். தேசபக்தி பாடத்தை திமுகவுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


stalin speech in ymca ground# dmk stalin# 2019 ymca meeting# kalainjar memorial 2019# tamil live news# live news# stalin latest speech# mk stalin speech


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.