விஜய் ரசிகர்கள் வழங்கும் விலையில்லா விருந்தகம்

விஜய் ரசிகர்கள் வழங்கும் விலையில்லா விருந்தகம்


சென்னை: 

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரது 45வது பிறந்த நாளை முன்னிட்டு தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தை தமிழகத்திலும் கர்நாடகாவின் பெங்களூருவிலும் ஆரம்பித்து பொதுமக்களுக்கு இன்று காலை உணவினை வழங்கி அசத்தினர். 

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22ம் தேதி ஆகும். அவரது பிறந்த நாளை அன்றே சிறப்பாக கொண்டாடிய விஜய் ரசிகர்கள் பல்வேறு நல திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

வட சென்னை விஜய் ரசிகர்கள் சார்பில் விலையில்லா விருந்தகம் சென்னை கொருக்குபேட்டையில் அமைத்துள்ளனர்.


இது தொடர்பாக விஜய் ரசிகர்கள் அடித்துள்ள பேனரில், தளபதி விஜயின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு, தினமும் 109 நபர்களுக்கு விலையில்லா காலை உணவு வழங்கப்படும் என்றும் காலை 7.35 மணி முதல் காலை 8.35 வரை உணவு வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்கள்.vijay birthday celebration# vijay birthday celebration in korukupet# vijay birthday celebration fans# fans enjoying vijay birthday celebration# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.