நான் எந்த தவறும் செய்யவில்லை!

நான் எந்த தவறும் செய்யவில்லை! 


புதுடில்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் என் மீது பொய் குற்றச்சாட்டு பரப்பப்பட்டுள்ளது என சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.அவரது இல்லத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிதம்பரம் விவகாரம் குறித்தும் அவருக்கெதிரான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறித்தும் இன்று காங். மூத்த தலைவர்களான கபில்சிபல், அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் , உள்ளிட்டோர் டில்லியில் உள்ள காங். கட்சி தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்க வந்தனர். அப்போது சிதம்பரமும் உடன் வந்திருந்தார்.


பின்னர் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில்:

ஐ.என்.எக்ஸ். மீடியா பண பரிமாற்றத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஐ.என்.எக்ஸ் மீடி வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இல்லை. எனக்கு எதிராக சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் எந்த குற்றசாட்டையும் பதிவு செய்யவில்லை. நான் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தவறான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையே டில்லி தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் பேட்டியளித்ததையடுத்து காங். தலைமை அலுவலகத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர்.

உடனே அங்கிருந்து காரில் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார். உடனே சி.பி..ஐ. அதிகாரிகள் விடாமல் துரத்தி சிதம்பரம் வீட்டிற்கும் வந்தனர். 

அப்போது சிதம்பரத்துடன் காங். மூத்த தலைவர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, ஆகியோர் உடனிருந்தனர்.

உடனே சிதம்பரத்தை கைது செய்தனர். 

நீதிபதி ரமணா 2வது முறையாக மனுவை விசாரிக்க மறுத்ததையடுத்து மாலை 4 மணிக்கு, அயோத்தி வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் மீண்டும் முறையிட முடிவு செய்திருந்தது.

ஆனால், அயோத்தி வழக்கு விசாரணைக்கு பின்னர், அந்த அமர்வு கலைந்து சென்றது. 


தலைமை நீதிபதி தனது அறைக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பதிவாளருடன், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர்.


இதனை தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள்(ஆக.,23) விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.p.chithambaram news# p.chithambaram delhi home# p.chithambaram arrested# CBI arrested p.chithambaram# p.chithambaram latest news# p.chithambaram press meet# tamil live news# live news
Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.