தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு- வானிலை    

நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இன்று மட்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அதிகனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
இன்று மட்டும் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 13 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாரில் 10 செ.மீ மழையும்,சோழையார் மற்றும் அவலாஞ்சியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. 
தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை கடல் காற்று வீசி வருவதால், தென் தமிழக பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னயை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்,மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
vanilai# tamil nadu rain# rain in neelagiri# kovai rain# heavy rain in kovai# heavy rain# rain in chennai# tamil live news# live news 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.