அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் இறந்தால் வைகுண்டமா?!

அத்திவரதரை தரிசிக்க வரும்  பக்தர்கள் இறந்தால் வைகுண்டமா?! காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 1ம் தேதி தொடங்கிய அத்தி வரதர் வைபவம் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி முடியவுள்ளது. இதனையடுத்து நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து, கட்டுக்கடங்காத கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கென போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதற்கிடையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, அத்தி வரதரை இனி தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம் எனவும், தங்கி இருக்கும் அளவுக்கு தயாராக பக்தர்கள் வர வேண்டும் எனவும் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அத்தி வரதரை தரிசிக்கும் விஐபி தரிசன வழியில் இன்று திடீரென மின் கசிவு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பதட்டம் அடைந்தனர். சிலருக்கு காயம் ஏற்பட்டது. 

அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறுகையில், இப்போது சரி செய்யப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதரை தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசிக்கின்றனர். அவ்வாறு தரிசனம் செய்ய வரிசையில் காத்திருக்கும்போது பலர் மயக்கம் அடைகின்றனர்.இநத நிலையில் அத்திவரதரை தரிசிப்பதற்காக காத்திருந்த சின்ன காஞ்சீபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பூங்காவனம்மாள் (வயது 83) நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தார். 


உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர் இறப்பு நடப்பதால் சிலர் வருகையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.  

சாமியார்கள் கூறுகையில்:

 அத்திவரதரை பக்தர்கள் ஆர்வத்துடன் தரிசிக்க வருகின்றனர். ஆனால் சிலர் மயக்கம் அடைந்து இறப்பதாக செய்திகள் தொடர்ந்து வருகின்றன. அங்கு உயிர் பிரியலாமா? அப்படி பிரிந்தால்  அந்த உயிர் வைகுண்டம் போகும் என்று கூறுகின்றனர்.  இது  மூட நம்பிக்கையா? உண்மையா??  அப்படி வைகுண்டம் போகுது என்றால் அந்த உடலில் இருந்து மனம் தானே வர வேண்டும்? அது தானே அடையாளம்! சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்தால் உடலில் மாற்றம் ஏற்படுகிறதே! இதில் எது உண்மை என்று நீங்களே சிந்தித்து பாருங்கள்!.  

இவ்வாறு சாமியார்கள், சித்தர்கள், அனந்தர்கள் அவர்கள் கருத்தை முன் வைக்கின்றனர்.  


athivarathar koil death# kanjipuram athivarathar# why so many death in athivarathar koil?# saamiyargal about athivarathar# siththargal about athivarathar koil# tamil live news# live news# anmigam news# athivarathar 


Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.