ஆவின் பால் விலை விபரம்: மேலும் உயருமா?!

ஆவின் பால் விலை விபரம்: மேலும் உயருமா?!  

பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
4 ரூபாய் உயர்த்தியது போதாது என்றும் 6 ரூபாய் உயர்த்தி பின்னர் 10 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். சென்னை செனாய் நகரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் செங்கோட்டுவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு தீவனங்களின் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளதால் லிட்டருக்கு 13 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு லிட்டருக்கு உற்பத்தி செலவு 50 ரூபாய் வரை ஆவதாகவும் நல்ல சுகாதாரமான வளர்ப்பு மாட்டிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை பெற அரை கிலோ தீவனம் கொடுக்க வேண்டும் என்றும் செங்கோட்டுவேல் கூறினார்.
எனவே, தற்போதுள்ள விலையை மறு பரிசீலனை செய்து, உற்பத்தி செலவுக்கு ஏற்றாற்போல் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
பால் விலையேற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பால் உற்பத்தியாளர் நலச் சங்க தலைவர் செங்கோட்டுவேலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், கடந்த 5 ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் ஊழியர்களின் ஊதியம் உயர்ந்துள்ளது. ஆனால் பாலினை உற்பத்தி செய்பவர்களுக்கு அதற்கான தொகை கிடைப்பதில்லை என்று கூறினார்.


aavin milk rate# milk rate today# today milk price# milk rate increase# tamil live news# live news# AAVIN 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.