கமலின் அரசியல் பணிகள் தீவிரம்!

கமலின் அரசியல் பணிகள் தீவிரம்! 


சென்னை : 


கமல் கட்சியில் விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான விளக்கக் கூட்டம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடக்கிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி 2021ல் தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. இதற்காக வார்டு தோறும் கட்சிப் பணிகளை நிறைவேற்ற ஏதுவாக விரிவாக்கப் பணிகள் நடக்க உள்ளன. 


இதுவரை மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களின் கீழ் நிர்வாகிகளும் தொண்டர்களும் பணியாற்றினர். இனி மாவட்ட தலைவர் அவருக்கு கீழ் செயல் தலைவர் இணை மற்றும் துணை செயலர் 10க்கும் மேற்பட்ட மாவட்ட கமிட்டியினர் நியமிக்கப்பட உள்ளனர். 


விரிவாக்கப் பணி குறித்த விளக்கக் கூட்டம் நாளை முதல் 16ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்க உள்ளது. 

'2021 நமக்கான ஆட்சி' என்ற தலைப்பின் கீழ் நடக்க உள்ள இக்கூட்டம் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களிலும் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட விருதுநகரிலும் நடக்க உள்ளது.


இக்கூட்டத்திற்கு கட்சியின் துணை தலைவர் ஆர்.மகேந்திரன் பொதுச்செயலர் ஆ.அருணாச்சலம் பொருளாளர் ஏ.சந்திரசேகரன் ஆகியோர் தலைமை வகிக்க உள்ளனர்.makkal neethi maiyam# makkal neethi maiyam kamal# kamal next step# actor kamal# makkal neethi maiyam politics# makkal neethi maiyam 2019# makkal neethi maiyam meeting# tamil live news# live news  
 
 

   Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.