எர்ணாவூர் நாராயணன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

எர்ணாவூர் நாராயணன் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து 


சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

ஆவணி மாதம் அஷ்டம திதி ரோகினி நட்சத்திரத்தில் வாசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாக பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பாக எனது இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை மேம்படுத்திட பகவத்கீதை என்ற ஒப்பற்ற ஞானநூலினை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களை அழகிய வண்ணக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரித்து, கிருஷ்ணரே குழந்தையாக தங்கள் இல்லத்திற்கு வருவதாக எண்ணி, இல்லங்களின் வழிநெடுக குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவினால் பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பால், பழங்கள், இனிப்பு பலகாரங்களை படைத்து, இறைவனை வழிபட்டு, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தன்கையில் இருக்கும் சுதர்சனசக்கரதால் அன்று தீயவர்களை அழித்த மஹாவிஷ்ணு அவதரித்த இத்திருநாளில், உலகெங்கும்வாழும் தமிழர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று தெரிவித்தார். S.குணசுந்தரி (வட சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி  செயலாளர்) 
சமத்துவ மக்கள் கழகம் 


ernavoor narayanan#ernavoor narayanan krishna jayanthi wishes#ernavoor narayanan leader# samathuva makkal kalagam leader ernavoor narayanan# ernavoor narayanan wishes# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.