அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு!

அகர்வால் கண் மருத்துவமனை நடத்திய கல்வி பயிலரங்கு!


சென்னை:

"கல்பவிருக்ஸா" 19 என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்வான 13-வது வருடாந்திர தொடர் மருத்துவ கல்வி திட்டம் (CME) நாடெங்கிலுமிருந்து கண் மருத்துவவியல் மாணவர்களை ஒன்றாக இணைத்தது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி செயல் பிரிவான கண் ஆராய்ச்சி மையம் இணைந்து, கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய அளவில் மூன்று நாட்கள் நடைபெறுகின்ற இந்த கல்விசார் பயிலரங்கை ஏற்பாடு செய்தது.

இந்த நிகழ்வை, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்.பி மையத்தைச் சேர்ந்த டாக்டர். நம்ரதா ஷர்மா அவர்கள் தொடங்கிவைத்தார்.  இத்தொடக்கவிழா நிகழ்விற்கு, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர். அமர் அகர்வால் தலைமை வகித்தார்.


செய்முறை பயிற்சி அமர்வில், மாறுகண் போன்ற மிக சிரமமான பிரச்சனைகளை எப்படி பரிசோதிப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி / கோனியோஸ்கோப்பி என்ற நோயறிதல் செயல்முறைகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்து ஒவ்வொரு பிரதிநிதிக்கும் தெளிவான விளக்கம் வழங்கப்பட்டது.

இந்நாட்டில் வெகுசில முன்னணி கண் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கப்பெறுகின்ற சமீபத்திய உயர்தொழில்நுட்ப பயோமெடிக்கல் சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய அறிமுக விளக்கத்தையும் அனைத்து பங்கேற்பாளர்களும் பெற்றனர்.  

தேர்வு தொடர்புடைய அனைத்து முக்கியமான தலைப்புகளும் மற்றும் செய்முறை தேர்வில் தேர்வு விளக்கக்காட்சியும் இப்பயிலரங்கில் விவாதிக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது . 

கல்பவிருக்ஸா 19 நிகழ்வின்போது தேர்ச்சி பெற்ற  மிகச்சிறந்த மாணவர்களுக்கான டாக்டர். ஜே. அகர்வால் முன்மாதிரி விருது,டாக்டர். வி. வேலாயுதம் நிலையான செயல்திறன் மாணவர் விருது ஆகியவை வழங்கப்பட்டன. 


அத்துடன் இந்த நிகழ்வின்போது அதிக ஆர்வமூட்டும் தேர்வை விளக்கக்காட்சியாக சமர்ப்பித்த சிறந்த மாணவருக்கு டாக்டர். (திருமதி) T. அகர்வால் விருதும் வழங்கப்பட்டது.  

டாக்டர்.நம்ரதா ஷர்மா ( எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் ஆர்.பி மையம்) பேசுகையில்: 

“கல்பவிருக்ஸா என்ற இந்நிகழ்வை தொடங்கி வைப்பது உண்மையிலேயே எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது.  தங்களது அறிவையும், திறனையும் நிகழ்நிலைப்படுத்திக் கொள்வதற்காக சமீபத்திய சிகிச்சை செயல்முறைகள் குறித்து அறிமுகத்தையும், பரிச்சயத்தையும் கண் மருத்துவ மாணவர்களுக்கு வழங்குவதில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இச்சிறப்பான பணியையும், பங்களிப்பையும் நான் மனமார பாராட்டுகிறேன்,” 

என்று கூறினார். 

டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் அமர் அகர்வால் பேசுகையில்:

“13-வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்த கல்பவிருக்ஸா செயல்திட்டமானது, மருத்துவ நேர்வுகளின் விளக்கக்காட்சி மீது அனுபவம் மிக்க கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து நேரடியான ஆலோசனை குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது.  3 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின்போது நடக்கவிருக்கும் விரிவான விவாதங்களும், கலந்துரையாடலும் பெரிதும் பயனளிப்பவையாக இருக்கும்.  இச்செயல்திட்டமானது, சிறப்பான திறன்களைப் பெறுவதற்கு கண் மருத்துவவியலாளர்களுக்கு உதவுவதோடு, நாம் சேவையாற்ற விழைகின்ற நோயாளிகளை உள்ளடக்கிய பொது சமூகத்திற்கும் அதிக பயனளிப்பதாக இருக்கும்,” 

என்று கூறினார்.

Video 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.