மின்சார ரெயிலில் இன்றும் நாளையும் மாற்றம்

மின்சார ரெயிலில் இன்றும் நாளையும்  மாற்றம் சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி காரணமாக ரெயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே இன்றும், நாளையும் (10-ந்தேதி) இரவு 11.25, 11.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 


கடற்கரை-தாம்பரத்திற்கு இன்றும் நாளையும், இரவு 11.00, 11.40, 11.59 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே இன்றும், நாளையும் இரவு 10.15, 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. 


இந்த ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

southern railway# train route changed# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.