கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனம்!

கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 4 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக கூடுதலாக மேலும் இரு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
41-வது நாளான இன்று அத்திவரதருக்கு வெள்ளை மற்றும் நீல நிறப்பட்டால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தரிசனத்துக்காக நேற்று இரவில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 
அதிகாலை 5 மணி அளவில் தரிசனம் தொடங்கிய நிலையில் பிற்பகல் வரை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். மேலும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். அத்திவரதர் தரிசனத்துக்கு ஏற்கனவே 10 வரிசைகள் உள்ள நிலையில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக மேலும் இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து 12 வரிசைகளில் பொதுதரிசனம் விரைவாகச் செல்லும் நிலையில் அதே நேரத்தில் வி.ஐ.பி. வரிசை, டோனர் பாஸ், இணையதளம் மூலமான சிறப்பு நுழைவுச் சீட்டு வரிசையில் வருபவர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் கூட்டமாக நிற்பதாகக் கூறப்படும் நிலையில் அந்த வரிசை செல்ல தாமதமம் ஏற்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் காமராஜ் குடும்பத்தினருடன் அத்திவரதரை தரிசனம் செய்தார்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பக்தர்கள் நெரிசலைக் குறைக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்திலும் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் தங்கி இளைப்பாறும் வகையில் இரண்டு இடங்களில் ராட்சத மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரிசனம் முடிந்து வெளியேறும் பக்தர்கள் நெரிசலின்றிச் செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 
இதனிடையே இன்று காலை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரையும் வரிசையில் வர போலீசார் வலியுறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இதையடுத்து மருத்துவக் குழுவினர் பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் உயர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் வேறு வழியில் செல்ல ஏற்பாடு செய்தனர்.
கடந்த ஐந்து நாட்களாக சராசரியாக 4 லட்சம் பேர் தொடர்ச்சியாக தரிசனம் மேற்கொண்டுவருகின்றனர். 40 நாட்களில் சுமார் 70 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். அத்திவரதர் தரிசனம் நிறைவடைய இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 5.15 மணியளவில் காஞ்சிபுரம் முழுவதும் மழை கொட்டத் தொடங்கியது. இலவச தரிசன வரிசையில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த நிலையில், விஐபி மற்றும் விவிஐபி தரிசன வரிசையில் வந்தவர்கள் கொட்டும் மழையில் நனைந்தபடியே தரிசனம் செய்தனர். கோவிந்தா கோவிந்தா என முழங்கியபடியே அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து சென்றனர். 
athivarathar koil rain# rain in athivarathar koil# bakthargal malaiyil tharisanam# tamil live news# live news# athivarathar# kanjipuram weather

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.