பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு

பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவு 

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய்கள் மூலம் தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் மற்றும் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அதனை ஏற்று நாளை முதல் அடுத்த மாதம் 9-ஆம் தேதி முடிய 1000 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை, பாளையங்கோட்டை வட்டங்களில் உள்ள கிராமங்களில் 24 ஆயிரத்து 90 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்றும், குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீர் மேலாண்மை மூலம் சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெறுமாறும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். babanasam water# edapadi press release# pasanam water release# tamil live news# live news# servalaaru water# manimutharu water

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.