சிதம்பரம் கைது இல்லை: தடை நீட்டிப்பு

சிதம்பரம் கைது இல்லை: தடை நீட்டிப்பு  


புதுடில்லி:


'ஐ.என்.எக்ஸ்., மீடியா' ஊழல் வழக்கில், காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரத்தை கைது செய்ய, அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, முந்தைய, காங்., ஆட்சியின்போது, 2007ல் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான, சிதம்பரத்தின் மகன், கார்த்தியின் தலையீட்டால், இந்த அனுமதி, முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.

இந்த வழக்கில், சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவரை கைது செய்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், அமலாக்கத் துறை கைது செய்வதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள், ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிதம்பரம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபில், ஒரு புதிய மனுவை தாக்கல் செய்தார்.'சிதம்பரத்திடம், அமலாக்கத் துறை, கடந்தாண்டு, டிச., 19, இந்தாண்டு ஜன., 1 மற்றும் 21ம் தேதிகளில் விசாரணை நடத்தியது. 

அந்த விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அதையடுத்து, இதற்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு, அமர்வு உத்தரவிட்டது.


அதுவரை, சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாக, அமர்வு கூறியுள்ளது.
p.chithambaram# p.chithambaram not arrested# court vs chithambaram# tamil live news# live news

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.