தமன்னாவுக்கு திருமணம்: விரைவில்!

தமன்னாவுக்கு திருமணம்: விரைவில்!  


“கேடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தமன்னா. விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, விஷால், தனுஷ் என்று முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இவரது காதல், திருமணத்தைப் பற்றி பல வதந்திகள் அவ்வப்போது பரவி வந்தன.

இயக்குனரும் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவை தமன்னா காதலிப்பதாக சமீபத்தில் வதந்தி பரவியது. இந்த நிலையில், தமன்னா ஒருவரை காதலித்து அவருடன் டேட்டிங் சென்றதாகவும், விரைவில் அவரை தான் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவின, இந்த செய்திகளையெல்லாம் முழுமையாக மறுத்து வந்தார் தமன்னா.


பாகுபலி நடிகர் பிரபாசை காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனையும் மறுத்த அவர் தனக்கு நடிப்பு மட்டுமே முக்கியம் எனக் கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது திருமணம் பற்றிய தகவலை தெரிவித்திருக்கிறார் தமன்னா. 

அதாவது, தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவது உறுதியாகி விட்டது. ஆனால் அது காதல் கல்யாணம் இல்லையாம், பெற்றோர்கள் பார்க்கும் நபரை தான் தமன்னா திருமணம் செய்து கொள்ளப் போகிறார். 

இதனை ஒரு பேட்டியில் அவரே தெரியப்படுத்தியுள்ளார். அவரது பெற்றோர் தமன்னாவிற்கு தற்போது தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகின்றனர். தனக்கு ஏற்ற மணமகன் கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்வாராம் தமன்னா.

இன்னும் சில மாதங்களிலேயே திருமணம் நடக்கும்   என எதிர்பார்க்கப்படுகிறது. 


thamanna marriage#actress thamanna marriage soon# thamanna marriage news# thamanna marriage where?# actress thamanna marriage# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.