ஏ.கே.விஸ்வநாதனுக்கு "ஆளுமை விருது"

ஏ.கே.விஸ்வநாதனுக்கு "ஆளுமை விருது"

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு பெருங்குற்றங்களை விட பெரும் தலைவலியாக விளங்கியது செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு குற்றங்கள் தான். நாள்தோறும் இன்றைய செயின் பறிப்பு சம்பவங்கள் என பட்டியலிட்டால் குறைந்தபட்சம் 10 சம்பவங்களாவது நடந்திருக்கும்.
ரோந்து, வாகன சோதனை என காவல் துறையினரின் நடவடிக்கையால் ஓரளவு கூட இந்த குற்றங்களை குறைக்க முடியாத நிலை ஏற்பட்டது. பகலிரவு பாராமல் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறித்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனர் கொள்ளையர்கள். 
ஆனால் இன்று இது போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறைந்ததற்கு காரணம் எல்லாவற்ரையும் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சிசிடிவி தான்.
சென்னையில் உள்ள 135 காவல் நிலைய எல்லைகளில் இன்று 2 லட்சத்து 56 ஆயிரம் கேமராக்கள் கண்காணிக்கிறது. கடந்தாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதத்தில் சுமார் 400 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. ஆனால் நடப்பாண்டில் இந்த 8 மாதத்தில் 50 சதவீத செயின் பறிப்பு குற்றங்கள் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர் அதிகாரிகள்.
குற்றங்கள் குறைந்தது மட்டுமல்ல சிசிடிவி உதவியால் கடந்தாண்டின் இறுதியிலேயே 85 சதவீத செயின் பறிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தற்போது நடக்கும் செயின் பறிப்பு வழக்குகளில் அதிகபட்சம் 3 நாட்களில் குற்றவாளிகள் சிக்கிவிடுகிறார்கள் என கூறும் காவல் துறையினர் இப்போதெல்லாம் எந்த செயின் பறிப்பு வழக்கிலும் தப்பி செல்லும் குற்றவாளிகள் என யாரும் இல்லை என மார்தட்டிக் கொள்கின்றனர்.
செயின் பறிப்பு குற்றங்களை குறைத்தது மட்டுமல்ல குழந்தை கடத்தல், கொலை, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் என எல்லா சம்பவங்களிலும் உண்மை தன்மையை கண்டறிந்து குற்றவாளிகளை சிக்க வைக்க பெரிதும் உதவுகிறது. சிறு முயற்சியாக தொடங்கி இன்று பெரும் பலன் தரக்கூடிய வெற்றிகரமான திட்டமாக மாறுவதற்கு முதன்மையான காரணம் யார் என்றால் அது காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தான் என கை காட்டுகின்றனர் காவல் துறையினர்.
இது பொதுமக்களின் பாதுகாப்புக்காக பொதுமக்களே செய்யும் மூலதனம் என்று ஒவ்வொரு பகுதியாக ஆணையர் விஸ்வநாதன் செய்த விழிப்புணர்வு அனைவரையும் ஈர்த்தது. 
அதனால் தான் சென்னை முழுவதும் பொருத்தப்பட்டுள்ள அத்தனை சிசிடிவிகளும் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், குடியிருப்பு நல சங்கத்தினர் நன்கொடையால் மட்டுமே பொருத்தவதற்கு சாத்தியமானது.
இதன் விளைவு, எங்கு திரும்பினாலும் சிசிடிவிகள் கண் சிமிட்டுவதால் குற்றங்கள் குறைகிறது. மறுபுறம், சிசிடிவி பதிவுகளை வலுவான ஆதாரமாக நீதிமன்றமும் ஏற்றுக் கொள்வதால், வழக்கு விசாரணையும் விரைவாக முடியும் சூழல் சாத்தியமாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் காவல்துறையினருக்கு குற்றவாளிகளை இனங்காண உருவாக்கப்பட்டுள்ள பேஷ் டேக்கர் (Face Tager) என்ற செயலி மூலம், தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த, சுமார், ஒரு லட்சம் குற்றவாளிகளின் விவரங்களில், போலீசாரின் பாக்கெட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆபத்துகாலத்தில் பெண்களுக்கு உதவும், காவலன் SoS என்ற செயலி, செல்போன் மூலம் எந்த காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் புகார் கொடுக்க வசதியாக சிசிடீஎன்எஸ் செயலி (CCTNS APP), காணாமல் போன செல்போன், வாகனங்களை கண்டுபிடிக்க உதவும் டிஜிகாப் 2.0 செயலி, (digicop 2.0), போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நவீன கேமரா மூலம் கண்டுபிடித்து வீட்டிற்கே அபராத ரசீது அனுப்பி வைக்கும்  முறை என, இப்படி பல தொழில்நுட்பங்களை கொண்டு வந்து காவல்துறையை சுறுசுறுப்பான செயல்பாட்டுக்கு, ஏ.கே.விஸ்வநாதன் கொண்டுவந்திருக்கிறார்.
தற்போது வரை நாட்டிலேயே, அதிக சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள ஒரே நகரம் என்ற பெயரை சென்னை பெற்றுள்ளது. புறநகர் பகுதிகளிலும், சிசிடிவி கேமராக்களை இன்னும் நிறுவ வேண்டும் என்பதோடு, 4 லட்சம் சிசிடிவி கேமிராக்களை பொருத்துவதே, தமது இலக்கு என்கிறார் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன். ஊக்கு விற்பவர்களை ஊக்குவித்தால் தேக்கு விற்பார்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், ஆளிநர்களை ஊக்குவித்து செயல்படும் இவரது ஆளுமைக்கு தான் இந்த ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது.

ak viswanathan# 73rd independence day award AK  viswanathan# police commissioner  viswanathan#  viswanathan commissioner in chennai#  A.K viswanathan Award in stage# edapadi giving award to A.K viswanathan# tamil live news# live news 

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.