பிக் பாஸ் மீது சரவணன் குற்றச்சாட்டு!

பிக் பாஸ் மீது சரவணன் குற்றச்சாட்டு! 


சரவணனை கன்பெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், “பெண்களைப் பற்றிய தவறான கருத்துகளைக் கூறியதால், பிக்பாஸ் குழு உங்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இப்படியே சென்று விடுங்கள்” என்று கூறினார். இப்படியே சென்று விடுங்கள் என்று கூறியதற்கு மறுவார்த்தை பேசாமல் அங்கிருந்து வெளியேறினார் சரவணன்.

இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர்  நான் பிக்பாஸில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு பணம் பங்குபெற்று வரலாம் அதன் மூலம் புது வாழ்க்கையை துவங்கலாம் என எண்ணியிருந்தேன் . 

ஆனால், எனக்கு இப்படியொரு அவப்பெயரையும், கலங்கத்தையும் ஏற்படுத்தி என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

நான் கல்லூரி படித்த காலத்தில் பேருந்தில் பெண்களிடம் விளையாட்டாக  தவறாக நடந்து கொண்டது உண்மை தான். ஆனால் நான் பிக்பாஸ் வீட்டிற்கு அதற்காக செல்லவில்லை. அங்கிருக்கும் பெண்களிடம் கண்ணியமாக தான் நடந்துகொண்டேன். அப்படியிருந்தும் என்னை இப்படி அவமானப்படுத்தி வெளியேற்றிவிட்டார்கள்.

இது முன்னரே தெரிந்தால் நான் பிக்பாஸிற்கு சென்றிருக்கவே மாட்டேன். எனக்கு ஒரே ஒரு மன கஷ்டம் தான், நான் கூறிய கருத்திற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என்று சரவணன் தெரிவித்துள்ளார்.

big boss saravanan# big boss saravanan suspended# big boss saravanan give up# out in big boss saravanan#big boss saravanan angry# tamil live news# live news# big boss saravanan vs kamal

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.