காஷ்மீரில் பதற்றம்: மக்கள் பீதி

காஷ்மீரில் பதற்றம்: மக்கள் பீதி  


புதுடில்லி : 

காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்க மத்திய அரசு முடிவு செய்த பிறகு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன்படி, லடாக்கில் உள்ள கார்கில், டிராஸ் மற்றும் சான்கூ ஆகிய பகுதிகளுக்கு கூட்டமாக மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் எந்த பகுதியிலும் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து சென்றால் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கார்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மறுஉத்தரவு வரும் வரை காலை 5 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பதற்றமான நிலை நிலவுவதால் காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்படும் வரை அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் மக்கள் பீதியில் உள்ளனர்.


kashmir issues# kasmir 144 rules# kashmir news# tamil live news# live news# kashmir peoples shocked

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.