நின்ற கோலத்தில் அத்திவரதர்: பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது!

நின்ற கோலத்தில் அத்திவரதர்: பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது! 

ன்று விடுமுறை தினம் என்பதால், அத்திவரதர் தரிசனத்துக்கு காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 50 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.
அத்திவரதர் வைபவத்தின் 35 வது நாளான இன்று நீல மற்றும் மஞ்சள் நிற பட்டாடையில், ஏலக்காய், மல்லிகை, தாமரை மலர்கள் அலங்காரத்தில் அத்திவரதர் காட்சி அளித்து வருகிறார். அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இதுவரை 50 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர்.

நேற்று 2 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ள நிலையில், இன்றும் 2 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 34 நாட்களில் 55 லட்சம் பேர் தரிசித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களைச்சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு வந்துள்ளனர்.
10 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளதால், 3 மணி நேரத்தில் தரிசனம் முடித்து செல்கின்றனர். ஆங்காங்கே உணவு, குடிநீர், ஓய்வு கூட வசதிகளும், மருத்துவ உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையே வெளியூர் பக்தர்களின் 30 ஆயிரம் வாகனங்கள், நகரில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால், மேலும் வாகனங்களை உள்ளே அனுமதிக்காமல், எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி, பேருந்து மற்றும் ஆட்டோக்களில் அனுப்பி வைத்து வருகிறார்கள்.

மேலும் நெரிசலை தவிர்க்க, பக்தர்களை அழைத்துச்செல்லும், மினிபேருந்துகளின் எண்ணிக்கை 45 ல் இருந்து, 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தரிசனம் முடித்த பக்தர்கள், 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து, தங்களது வாகனங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காலை 7 மணி அளவில், விஐபி வரிசையில் சென்று, அத்திவரதரை தரிசித்த அவர், அத்திவரதர் பக்தர்களுக்கான அன்னதான திட்டத்திற்கு, இதுவரை சுமார் 35 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

athivarathar standing position# kanjipuram athivarathar# tamil live news# live news# peoples in athivarathar # long line in athivarathar kovilPost a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.