உடல்நலக் கவனிப்பு சேவை தொழில்நுட்ப மாநாடு இரண்டு நாள் நடக்கிறது!

உடல்நலக் கவனிப்பு சேவை தொழில்நுட்ப மாநாடு இரண்டு நாள் நடக்கிறது!


CAHO TECH நடத்தும் உடல்நலக் கவனிப்பு சேவை தொழில்நுட்ப மாநாடு ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் செப்டம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெறுகிறது 

இந்த இரண்டு நாள் நிகழ்ச்சி ஸ்டார்ட்அப் முனைவு நிறுவனங்களுக்கு நிதியுதவி, அடைகாப்பு மற்றும் புதிய உடல்நல தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு மருத்துவமனைகளுடன் சேர்ந்து பீட்டா – பரிசோதனைக்கான ஒரு தளத்தை வழங்கும்.

தொழில்நுட்பம், நம்முடைய வாழ்க்கையிலும் மற்றும் உடல்நல சிகிச்சைகளிலும் ஒரு முக்கிய பங்காற்றத் தொடங்கியுள்ளது என்றால் அது மிகையில்லை. 

தொழில்நுட்பமானது, உடல் சிகிச்சை பராமரிப்பில் மிகத் துரிதமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. CAHOTECH, அண்மைக்கால மருத்துவ முன்னேற்றங்கள் குறித்து மருத்துவ சேவை வழங்குபவர்கள் கற்றுக்கொள்வதற்கும் மற்றும் தகவல் தொழில்நுட்பம், மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள்,  செயல்முறைகள் ஆகிய துறைகளில் எதிர்கால போக்கு நிலவரங்களுக்கு அவர்களை தயாராக வைப்பதற்கும் ஒரு மேடைத்தளமாக ஆகியுள்ளது.

தொழில்நுட்பம் உருவாக்குபவர்கள், புதிய படைப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கிடையே உடல்நல சிகிச்சை வழங்குவதில் ஒரு ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான, அணுகூலமான உறவை உருவாக்குவதும் CAHOTECH – ன் நோக்கமாகும்.  இந்தியாவில் மருத்துவ தொழில்நுட்பத்திற்குரிய சந்தை சிறியதாகும்.

ஆனால், இது துரிதமாக விரிவடைந்து வருகிறது. இது, இப்போதுதான் வளர்ந்து வருகிறது மற்றும் குறைவான எண்ணிக்கையிலான உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களும் சிதறிக் கிடக்கின்றன. மதிப்பீடு செய்யப்பட்ட US$2.75 பில்லியன் சந்தையில் இறக்குமதிகளின் பங்கு 75% - க்கு மேல் ஆகும். 

ஒரு மாறிவரும் மருத்துவ தொழில்நுட்ப நிலவமைப்பில், விருத்தியடைந்து வரும் மருத்துவ கவனிப்பு வழங்கும் மற்றும் நிதி இயக்க முறைகள் மற்றும் மாறும் நோயாளி விவரம் ஆகியவை மருத்துவ தொழில்நுட்ப தொழிலில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன.  இந்த மாநாடு, நவின உடல்நல சிகிச்சை சேவை வழங்கலை அனைவருக்கும் அணுக்கமுடையதாக, கிடைக்கக்கூடியதாக மற்றும் மலிவானதாகச் செய்வதற்கு தீர்வுகளை கண்டறிய முற்படுகிறது. 

CAHO என்பது, அங்கீகரிக்கப்பட்ட உடல்நல சிகிச்சை (ஹெல்த்கேர்) சேவை வழங்கும் நிறுவனங்களின் கூட்டமைப்பாகும்.  பயிற்சியளித்தல் மற்றும் வள ஆதாரங்களை உருவாக்குதல் மூலம் நோயாளியின் பாதுகாப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவது CAHO – ன் நோக்கமாகும். 

உரிய, குறைந்த செலவிலான தொழில்நுட்பம் பாதுகாப்பான மற்றும் உயர்தரம் வாய்ந்த உடல்நல சிகிச்சை சேவை வழங்குவதற்கு மருத்துவமனைகளுக்கு உதவும் என்றும் இது கருதுகிறது. 

புத்தாக்கத்தை வளர்த்தல் மற்றும் அதற்கு வழிகாட்டுதல் என்பது உடல்நல சிகிச்சை சேவை வழங்கல் முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் CAHO கருதுகிறது.


CAHO tech 2019#IIT Madras# health care technology conference# caho 2019 meeting# tamil live news# live news#2 days manadu in iit madras caho#

Post a Comment

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.